டெல்லி: கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர எதுவும் செய்யாத பிரதமர் மோடி, கருப்புத் துணியை பற்றி பேசுவதா?” -ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்தியஅரசின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புஉடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்தனர். மேலும் கருப்பு உடையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதை பிரதமர் மோடி விமர்சித்து பேசியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். கருப்புபணத்தை வெளியே கொண்டு வருவோம் என்று கூறிய பிரதமர் மோடி, அதை கொண்டுவர ஏதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், கருப்பு உடை அணிந்து போராடியதை விமர்சிக்க பிரதமருக்கு தகுதி இல்லை என்று காட்டமாக கூறினார். மேலும் பிரதமர் மோடி வாய்ஜாலம் காட்டுபவர், அவர் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார் என்றும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடி கருப்பு உடையில் இருக்கும் படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, கருப்பு உடைகள் குறித்து அர்த்தமற்ற பிரச்னையை கிளப்புகிறார். இன்று முன்னதாக, விலைவாசி உயர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 5 ஆம் தேதி கருப்பு ஆடை அணிந்து காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி, “கருப்பு மந்திரத்தை” நம்புபவர்கள் மீண்டும் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கூறினார்.