கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணச் செய்தி, சின்னத்திரை உலகையே ஸ்தம்பிக்கச் செய்தது. அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் என்பது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
சித்ராவின் பிரத்யேக ரசிகர் கூட்டத்திற்கு, இன்று வரையிலும் இவரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவ்வப்போது அவரின் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சித்ராவின் தீவிரமா ரசிகர் ஒருவர், அவர் பயன்படுத்திய விலையுயர்ந்த காரின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் இல்லாத வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த விலையுயரந்த காரை சித்ரா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வாங்கினார்.