சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு, ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று அரசு அமைத்த விசாரணைக்குழு  நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த சூரப்பா மீது, பணி நியமனத்தில்  ரூ.280 கோடி அளவில் ஊழல்  புகார்கள் எழுந்தது. இது குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.

சூரப்பா மீதான விசாரண  அறிவிப்புக்கு சூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். தன் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலாலும்,  சூரப்பாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், சூரப்பாவின் பதவிக்காலம் வரும் 11ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், அவரிடம் விசாரணை நடத்தப்படுமா  என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.  அவரது பதவிக்காலம் முடிந்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு