டெல்லி: தமிழகஅரசு, வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில்,   தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு, கடந்த பிப்ரவரி மாதம், சட்டமன்றத்தில்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான  மசோதா நிறைவேற்றியது. அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியதைத்யடுத்து, அது சட்டமாக அறிவிக்கப்பட்டு, அரசாணை  வெளியிடப்பட்டது.

இதற்கு மற்ற சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக உயர்நீதிமன்றத்திலும் , வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கக்கோரி பலர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில்,இ எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார், என்பவர், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த ‘நீதிபதிகள், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் மனு தொடர்பாக  தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.