கொழும்பு, 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதியும், ராஜபக்சே அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தவர்  ’கர்னல்’ கருணா, எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரன்.
முன்னாள் இலங்கை அதிபர்  மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவினை கொண்டிருந்தார். எல்டிடிஈ எனப்படும் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க கருணாவை  ஒரு கருவியாக இலங்கை அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்சேவால் பயன்படுத்திக்கொண்டார்.

ராஜபக்சேவுடன் கருணா
ராஜபக்சேவுடன் கருணா

தற்போதைய சிறிசேனா அரசால் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.  அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு வருமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அழைத்தி்ருந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று விசாரணைக்கு ஆஜரானார் கருணா. விசாரணையில் அவர் ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டதால் போலீசார் அவரை கைது சிறையில் அடைத்தனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கிழக்கு பகுதி தளபதியாக இருந்து விடுதலைப்புலிகளை வழி நடத்தியவர் கர்னல் கருணா. பின்னர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட  கருத்து மோதலால் கடந்த 2004ம் ஆண்டு  இயக்கத்தில் இருந்து பிரிந்து மஹிந்த ராஜபக்சேவுடன் இணைந்தார்.
இதனால் அவருக்கு ராஜபக்சே அமைச்சரவையில், துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது

இவரின் துணைகொண்டு இலங்கை ராணுவம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. மேலும் பிரபாகரன் உள்பட முக்கிய தளபதிகள் சாவுக்கு கருணாவே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மேலும், கருணா லண்டனுக்கு 2007ம் ஆண்டு வந்த போது, அவர் அடையாள ஆவண மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.