தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… எண்ணிக்கை 15 ஆக உயர்வு…

Must read

சென்னை:

மிழக்ததில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும்  3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்,  ஏற்கனவே, 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அதன்படி, சென்னை போரூர், புரசைவாக்கம், கீழ்கட்டளை  பகுதிகளை சேர்ந்த, அமெரிக்காவில் இருந்து தமிகம் திரும்பிய 74 வயது முதியவர் மற்றும் 52 வயது பெண், சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More articles

Latest article