சென்னை: 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதனப்டி,  15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு  பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, இன்றுமுதல் அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவின் இணையதளம் மற்றும் ஆப் (https://www.cowin.gov.in/  COWIN ) மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும்  15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 3 ஆம் தேதி போரூர் பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இதற்காக ஒரு ஆசிரியரை சிறப்பு அதிகாரியாக தலைமை ஆசிரியர் பணியமர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்க வேண்டும். 2007 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள். மேலும், 2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளி மாணவர்களின் விவரங்களை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.