மகாராஷ்டிராவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களும் பாதிப்பு…

Must read

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தல் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், மாநில அமைச்சர்கள் 10 மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில துணைமுதல்வர் அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும்  தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்ததிருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 22ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், 8,067 பேருக்கு நேற்று உறுதியாகி உள்ளது.

இதுமட்டுமின்றி ஒமிக்ரான் பாதிப்பிலும் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஸ்டிரா மாநிலத்தில் 454 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே கொரோனா முதல்அலை மற்றும் 2வது அலையின்போதும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருந்தனர். இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது அங்கு வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மந்திரிகள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல் மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பரவலால் கொரோனா 3-வது அலை ஏற்பட  சாத்தியக்கூறு உள்ளதாக மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article