பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.

RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா வைரசையும் சமாளிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு காரணமான SARS-CoV-2 வைரஸ் பல்வேறு உருமாறி வருவதை அடுத்து அதன் தற்போதைய உருமாற்றம் தவிர வேறு புதிய உருமாற்றம் பெற்றாலும் அதனை சமாளிக்க கூடிய வகையில் இந்த புதிய RS2 தடுப்பூசி இருக்கும் என்று தெரிகிறது.

இந்திய அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவு பேராசிரியர் ராகவன் வரதராஜன் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பல்வேறு கட்ட சோதனைகள் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து மனிதர்களுக்கு பயன்படுத்த தேவையான ஒப்புதலுக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.