சென்னை: தமிழகத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  கூறி உள்ளதாவது: முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருப்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.

தமிழகத்தில் முதல்கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைக்க  வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.