சென்னை

ன்று நடந்த டி என்  பி எஸ் சி குரூப் 1 தேர்வை தமிழகம் முழுவதும் 1.31 லட்சம் பேர் எழுதி  உள்ளனர்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி என்  பி எஸ் சி இன்று 66 பதவிகளுக்கான தேர்வை நடத்தியது.   இதில் துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 4, மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பைக் கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது.

இந்த தேர்வு எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இஞ்சினியரிங், டாக்டர் படிப்பு மற்றும் அதில் பட்டமேறபடிப்பு படித்தோர் ஆகியவர்கள் விண்ணப்பித்தனர்.  மொத்தம் 2,57,237 பேர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்ப்பட்டிருந்தனர்.  இவர்களில் ஆண்கள் 1,28,401 பேர் ஆண்கள், 1,28,401 பேர் பெண்கள் மற்றும் 11 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்கள்.

இன்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடந்தது.  இந்த தேர்வில் இன்று 1,31,264 பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர்.  அதாவது 51.09% பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளனர்.  இந்த தேர்வு மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.   இன்று நடந்த குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களில் விடைகளை குறிக்கவும் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் கறுப்பு நிற பால்பாயிண்ட் பேனா பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்படிருந்தது.

அத்துடன் விடைத்தாளில் கையொப்பம் இடுவதுடன் பெருவிரல் கைரேகை பதிவும் இடப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   வினாத்தாளில் A, B C, D என்னும் தேர்வுகளுடன் E என்னும் தேர்வும் அளிக்கப்பட்டிருந்தது.  இந்த E என்னும் தேர்வு விடை தெரியவில்லை என்றால் பயனபடுத்தலாம் என புதிய முறை அமலாகி உள்ளது.   அத்துடன் எத்தனை விடைகள் அளிக்கப்பட்டுள்ளன என்னும் எண்ணிக்கையையும் தெரிவிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.