சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையின்போது ஒமிக்ரான் BA.2 மாறுபாடு பாதிப்பு 10% இருந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலையானது தமிழ்நாட்டில் ஒமிக்ரானின் பிஏ.2 துணை வகைகளில் குறைந்தது 10 சதவீத பாதிப்பில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா 3வது அலையின்போது ஒமிக்ரான் தொற்று பாதிப்பு வேகமாக பரவியது. இருந்தாலும், தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழநாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து தகவலை தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரோன் திரிபு (BA.1), B.1.1.529 என்றும் குறிப்பிடப்படுகிறது, இதை பரவலாக பயன்படுத்தப்படும் PCR பரிசோதனையால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதற்காக மரபணு சோதனைகள் செய்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் ஒரு மாறுபாடு கண்டறியப்பட்டது. BA.1 மாறுபாட்டை விட 1.5 மடங்கு அதிக வேகத்துடன் BA.2 மாறுபாடு பரவுவதாகவும், குழந்தைகள் மத்தியில் அதிக வேகமாக பரவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில்  BA.1 மற்றும் BA.2 இன் தீவிர நிலைகள் பெரிய வேறுபாட்டைக் காட்டவில்லை என்று சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மற்றொரு காரணம்,  தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியதே என்று தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது அலையின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு  ஆய்வுகளின்போடி,  கோவிட்-19 இன் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் ஓமிக்ரானின் பிஏ.1.1 மாறுபாடு  என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஓமிக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு மொத்தம் 10 சதவீதம் என்றும்,  அதே சமயம் டெல்டா 2 சதவீதமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

Omicron மாறுபாடுகளான BA.1 மற்றும் BA.2 ஆகியவை பரஸ்பர நடத்தையைப் பொறுத்தமட்டில் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதாகவும், மூன்றாவது அலையில் இந்தியாவில் கண்டறியப்பட்டதால் Omicron இன் BA.2 மாறுபாடு  முற்றிலும் புதியதல்ல என்று தெரிவித்துள்ள நிபுணர்கள்,  இரண்டு வகைகளும் அதிக பரவும் தன்மை கொண்டவை  என்றும், அதிலும்  BA.2 கடுமையானதாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள்  தெரிவிப்பதாக கூறியிருப்பதுடன், ஆனால் இறப்பு அல்லது பரவலில் எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய, மூத்த வைராலஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான் கூறுகையில், மூன்றாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஓமிக்ரான் மாறுபாடுகள் அதிக தீவிரத்தன்மை கொண்டதாகவும் மற்றொரு அலைக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.