சென்னை:  தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,  கொரோனா டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் ஒரு கோடியாவது பயனாளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (டிச.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன்,  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துணை இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னை  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன. ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் கொரோனா டெஸ்ட் தீவிர படுத்தப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது”என்றார்.

சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு வைரசால் இந்தியா உள்பட பிற நாடுகள் பீதியடைய வேண்டாம்! கொரோனா அனலிஸ்ட் தகவல்..