டெல்லி: வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என  டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போது, ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, நிறுவனங்களை அரசு கையப்படுததலாம் என்றும், மக்களின் உயிரே முக்கியம் என்று கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் நேற்று  இரவு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த 20 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த கொடுமை நடந்துள்ளது.

டெல்லிக்கு வரும்  ஆக்சிஜன் சப்ளையை அரியாணா, உ.பி. இடையூறு செய்வதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எப்போதும் 48 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் ஸ்டாக் கைவசம் இருப்பதுதான் சிறந்தது என்கின்றனர் டெல்லி மருத்துவர்கள். ஆனால், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் 12-18 மணி நேரத்துக்கான கூடுதல் ஸ்டாக்குகள் மட்டுமே வைத்துள்ளனர், இதையடுத்து டெல்லி ஆக்சிஜன்கள் ரயில், விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,மத்திய அரசு வழக்கறிஞர் கூறியதாவது, அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெல்லிக்கு உடனே 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  தேவை. இல்லையெனில், நிலைமை சிக்கலாகி விடும், ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதிமொழியை மத்தியஅரசு எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து வாதாடிய மத்தியஅரசின் வழக்கறிஞர்,  வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்றும், அதைஎதிர்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியதுடன், இது மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை,  நிதர்னம் இதுதான் என்று கூறியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்பளை உள்ளிட்டவற்றை சுமுகமாக மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

மத்தியஅரசின் தகவல் மக்களிடையேபெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.