டெல்லி: உயிர்காக்கும் ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக எவரையும்,  தூக்கிலிடவும்  தயங்கமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.

டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக கங்காராம் மருத்துவமனை உள்பட பல தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, டெல்லிக்கு வரும் ஆக்சிஜனை அண்டை மாநிலங்கள் தடுத்து பறித்து வருவதாக குற்றம் சாட்டியது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் நாட்டின் தலைநகரிலேயே, ஆக்ஸிஜனுக்கான தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிர் இழக்கும் கொடுமைகளையும் நாம் பார்த்து வருகிறோம்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவையை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்துமாறு மத்தியஅரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,

மத்திய, மாநில அல்லது உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரிகள் யாராவது ஆக்ஸிஜனை பெறுவதிலோ, வழங்குவதிலோ தடையாக இருந்தால், அப்படிபட்டவர்களை தூக்கிலிடவும் தயாராக உள்ளதாகவும், ஆக்ஸிஜன் சப்ளைக்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை அளிக்குமாறு  கேட்டுக்கொண்டனது.

கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக மகாராஜா ஆக்ரசென் மருத்துவமனை அளித்த புகாரை விசாரித்தபோது, நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச்  காட்டமாக விமர்சித்தது.