சென்னை: தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது, தடுப்பூசிகள்  போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, விரைவில் மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என  என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் அதிக அளவில் கைவசம் உள்ளது. கோவேக்சின் குறைந்த அளவிலான நபர்களுக்கே போடப்பபட்டு வருகிறது.   இதனால் புதிதாக கோவேக்சின் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடுவது இல்லை. நிறைய இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும்,  கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போட வந்தால் நிறைய ஆஸ்பத்திரிகளில் கோவேக்சின் இருப்பு இல்லை.

தற்போது கொரோனா தொற்று  வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்ததிற்கு கோவாக்சின் 2லட்சம் டோஸ்,  கோவிஷீல்டு 2 லட்சம் டோஸ் என மொத்தம்  4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன . இதுகுறித்து காதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதுவரை  மத்தியஅரசிடம் இருந்து 67.85 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன  என்று கூறியவர்,  தற்போது வந்துள்ள  4 லட்சம் தடுப்பூசிகளும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.