இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் மனதுக்கு வேதனை அளிக்கிறது! டெட்ரோஸ் அதானோம்…

Must read

ஜெனிவா: இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் மனதுக்கு வேதனை அளிக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தலைவர்  டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் 2வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்  மேலும்,  3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேர் பாதிக்கப்பட்டதுடன், மொத்த பாதிப்பு 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307- ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,771- பேர் உயிரிழந்திருப்பதுன், இதுவரை  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை   1 லட்சத்து 97 ஆயிரத்து 894- ஆக உள்ளது தொற்று பாதிப்பில் இருந்து   நேற்று மட்டும் 2 லட்சத்து 51 ஆயிரத்து 827 பேர் குணமடைந்ததுடன், இதுவரை  குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்து  56 ஆயிரத்து 209- ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்ர, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 82 ஆயிரத்து 204-ஆக உள்ளது.

இந்தியாவில் தொற்று  பாதிப்பு உயர்ந்துள்ள நிலையில்,  அமெரிக்கா,  இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் தற்போதுள்ள உருவாகியுள்ள  சூழ்நிலை மனதை பதறவைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் வேதனை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய  அதானோம், இந்தியாவுக்கு எங்களால் முடிந்த எல்லா உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். தற்போது அங்குள்ள சூழல் மனதுக்கு வேதனையை தருகிறது. இந்தியாவிற்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அமெரிக்கச் சுகாதார நிறுவனம் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களை (ரத்தத்தில் குறைந்த அளவில் ஆக்சிஜன் இருக்கும் நபர்களுக்குப் பயன்படும் கருவி) இந்தியாவிற்கு அனுப்பி உள்ளது. மேலும் உலக சுகாதாரத்துறை சார்பாக 2,600 வல்லுநர்கள் இந்தியாவிற்கு வர உள்ளனர். அவர்கள் இந்திய சுகாதாரத்துறையோடு இணைந்து செயல்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article