சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி உள்ள நிலையில், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் முதல் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா, இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது.  தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா வைரஸ் 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3வது கட்டம் என்பது மிகவும் வீரியமானது. இந்த சமயத்தில் வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரிக்கும்.  இதனால் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60000 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து பிரபல  மருத்துவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணைமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்பட உயர் அதிகாரிகளி, மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.