அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு 11ஆக உயர்வு

Must read

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. நேற்று தமிழ்நாடு முபவதும் மொத்தம் 15,151 பேருக்கு மேற்கொண்ட பரி சோதனையில் 31 ஆண்கள் 25 பெண்கள் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 24ந்தேதி சிலருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி தென்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், முதலில் 6 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 160 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

More articles

Latest article