சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும்  என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, இன்று காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 கொண்ட மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, பேரவை கட்சிகளைச் சோந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின,  தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவல்  மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில்  உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருப்பதுடன் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள் இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை!” என வருத்தம் தெரிவித்த ஸ்டாலின்  மருத்துவ நிபுணர்கள்   இருவாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று மருத்துவ நிபுணர்கள், சட்டமன்ற குழுவினருடன்  விவாதிக்கப்பட்ட கருத்துகளை மனதிற்கொண்டு  இன்று மதியம் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மே 29,30, 31ஆகிய நாள்களில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை எட்டும் என்றும் அதன்பின்னர் படிப்படியாக பாதிப்பு குறையும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால்,  முழு ஊரடங்கு முடிவுக்கு வர வாய்ப்பில்லை.  ஜூன் 7ஆம் தேதி வரை ஊரட்ங்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடரும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]