டெல்லி: மே மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர், பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,  மக்களின் தேவை கருத்தில்கொண்டு, ரஷியாவில் இருந்துஸ் புட்னிக் -வி தடுப்பூசிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ஏற்கனவே முதல் தொகுப்பு வந்தடைந்துள்ள நிலையில்,  2வது தொகுப்பாக மேலும், 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கடந்த வாரம்  ஐதராபாத் வந்தடைந்துள்ளன. இதுவரை மொத்தம்,  150,000 டோஸ் மற்றும் 60,000 டோஸ் இந்தியாவுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், மே மாத இறுதிக்குள் சுமார் 3 மில்லியன் டோஸ் மொத்தமாக வழங்கப்பட இருப்பதாகவும், அதன்மூலம் இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி 5 மில்லியன் டோசாக அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது என ரஷியாவுக்கான இந்திய தூதர் டி.பாலா வெங்கடேஷ் வெர்மா தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஸ்பூட்னிக் தடுப்பூசி இந்தியாவில் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  850 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் இறுதியாக இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறியவர், இது  உலகெங்கும்  தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக் தடுப்பூசியில் கிட்டத்தட்ட 65-70% இந்தியாவில் தயாராகும் என்றும் என்று தெரிவித்துள்ளார்.