டெலலி: கேரள மாநில சட்டமன்ற எதிக்கட்சி தலைவராக விடி சதிசனை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கமிட்டி முடிவு செய்துள்ளது.
கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று முதல்வர் பினராயி விஜயன், 20ந்தேதி 2வது முறையாக 20 அமைச்சர்களுடன் மாநில முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து, தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்யும் வகையில், மாநில சட்டமன்ற கூட்டம் கூட உள்ளது.
நடைபெற்று முடிந்த 140 தொகுதிகளைக் கொண்ட கேரளா சட்டமன்ற தேர்தலில் 93 தொகுதிகளில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது. இதனால், சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் முன்னிலையில், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விடி சசிதனை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதனால், சசிதன் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.