Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

சென்னையில் தீவிரமடைந்து வரும் கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக உயர்வு…

Oct 10, 2020

சென்னை:  சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள ஊரடங்கு தளர்வாலும், மக்களின் மெத்தனத்தாலும், கொரோனா  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரு தெருவில் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மட்டும் 70 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குறைந்து வந்த தொற்று பாதிப்பு, கடந்த 10 நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததுமே தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,79,424 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,62,605 பேர் குணமடைந்து உள்ள நிலையில், 3,373 பேர் உயிரிழந்துள்ளனர்.. தற்போதைய நிலையில், 13,446 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் கடந்த 6-ந்தேதி  நிலவரப்படி 42 தெருக்களுக்கு மட்டுமே ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்,  சீல் வைக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. தற்போது  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70-ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் 4 தெருக்களுக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 தெருக்களுக்கும், ராயபுரம் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் ‘சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 தெருக்களுக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 தெருக்கள், கோடம்பாக் கம் மண்டலத்தில் 3 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 5 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 4 தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 தெருக்கள், வளசரவாக்கத்தில் ஒரு தெரு என மொத்தம் 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

அமேசான் நிறுவனத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு….
10/10/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer