டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், விமான நிலையங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2வது அலை  பரவியுள்ளது. இதனால் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதை தடுக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் மீண்டும் பாதுகாப்பி நெறிமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. முக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  விமான நிலையங்க்ளில், விமான நிலைய பயணிகள் மூலம் கொரோனா பரரவுவதை தடுக்க,  ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் வந்துள்ளன.

இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், நிலையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும், எனவே, முககவசம் அணிதல், சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்து, உள்ளூர் போலீஸ் உதவியுடன் விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.