புதுடெல்லி:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுகாதார நிலையங்களில் இன்று ஒத்திகை நடைபெற உள்ளது.

சீனாவில் பரவி வரும் உருமாறிய ‘பி.எப்., – 7’ வகை தொற்று, நம் நாட்டில் பரவுகிறதா என்பதை எளிதில் கண்டறியும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு, டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை முன்கூட்டியே உறுதி செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று நடக்கவுள்ள இந்த அவசரகால ஒத்திகையை, மாநில அரசுகளின் கூடுதல் தலைமை செயலர், முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் கண்காணிக்கவும், அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தேவையான முன் ஏற்பாடுகளை செய்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது….
முன் ஏற்பாடுகளை செய்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.