சென்னை:
சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களில் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து முகக்கவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தது