சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவில் அர்ச்சகர் பாஸ்கர் தினமும் தெருத்தெருவாக சென்று ஏழைகளுக்கு உணவு வழங்குகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் ஊரடங்கை மீறி வெளியில் வரப் பலரும் பயப்படுகின்றனர்.  ஊரடங்கு காரணமாகப் பல ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து உணவுக்கும் வழியின்றி வாடுகின்றார்.   இது பலரது மனத்தையும் உருக்கி உள்ளது.

இதையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் அர்ச்சகர் பாஸ்கர் தினமும் தெருத் தெருவாகச் சென்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.   அவர் உணவு சமைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து மூன்று சக்கர சைக்கிளில் எடுத்துச் செல்கிறார்.  அவருடன் மற்றும் இரு அர்ச்சகர்களும் இணைந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு என்பதால் இவர்களின் உதவிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.  எனவே இவர்களே மூன்று சக்கர சைக்கிளை தெருத்தெருவாக தள்ளிக் கொண்டு சென்று உணவு அளிக்கின்றனர்   தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.  அதை உண்மை என இந்த அர்ச்சகர் நிரூபித்துள்ளார்.