டெல்லி: நாடு முழுவதும் கொரோனாப பரவல் உச்சமடைந்துள்ளதால், நோயாளிகளுக்காக 3,816 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி தயார் நிலையில் வைத்திருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே 5,601 ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான மையங்களாக மாற்றங்பபட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து, இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் மருத்துவமனையில் கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.  தினசரி உயிரிழப்பும் 3ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதற்கிடையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற காரணங்களால் உயிரிழப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் (Central Government) சுகாதார நல முயற்சிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்திய ரயில்வே (Indian Railways) முக்கிய முடிவை எடுத்துள்ளது.  கொரோனா நோயாளிகளுக்காக இதுவரை இந்திய ரயில்வே,  5,601 ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான மையங்களாக மாற்றி உள்ளது. அவற்றில் 3,816 பெட்டிகள் பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்ட மிக குறைந்த அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த ரயில் பெட்டி மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.