டெல்லி: 12-14 வயதுடையவர்களுக்கு Covovax, Corbevax தடுப்பூசி போடலாமா என்பது குறித்து  நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 15 வயது முதல் 18 வயது இளஞ்சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து,  12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து  மத்தியஅரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மத்தியஅரசு  கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டுக்கு  அனுமதி வழங்கியது. இந்த தடுப்பூசிகளை  மார்ச் முதல் 12-14 வயதுடையவர்களுக்கு செலுத்தலாமா என்பது கறித்து,  நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) கோவிட் பணிக்குழு பிப்ரவரி 5 ஆம் தேதி இதைப் பற்றி விவாதிக்க உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய NTAGI இன் தலைவர் NK அரோரா,  15-17 வயதிற்குட்பட்டவர்கள் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இதையடுத்து  12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவது மார்ச் மாதத்திலிருந்து தொடங்கலாம் என்று இருக்கிறோம், ஆனால், இதுகுறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை,  எந்தவொரு முடிவும் அறிவியல் தரவு மற்றும் தொற்றுநோய் நிலைமையைப் பொறுத்துதான் எடுக்கப்படும் என்றார்.

இதுதொடர்பாக நாளை (பிப்ரவரி) நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில்,  சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் உயிரியல் இ ஆகியவை  தங்கள் தரவை இது தொடர்பாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக NTAGஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால்,   நிதி ஆயோக் மற்றும் தேசிய கோவிட் பணிக்குழுவின் தலைவர், டாக்டர் வி கே பால், (சுகாதாரம்),  தடுப்பூசி விரிவாக்கம் உடனடியாக நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

புனேவை தளமாகக் கொண்ட சீரம் நிறுவனம்  ஆனது அமெரிக்காவின் நோவாவாக்ஸின் பதிப்பான Covovax ஐ உருவாக்குகிறது, அதே நேரத்தில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Biological E ஆனது Corbevax ஐ தயாரித்து வருகிறது, மேலும் இருவரும் குழந்தை மருத்துவ குழுக்களில் தாமதமான மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர்.

COVOVAX, CORBEVAX: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி…