வியாபாரி ஒருவரிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் உட்பட, 3 காவலர்களை இடைநீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி பகுதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருபவர் சாகுல் அமீது. அவரை மிரட்டி உதவி ஆய்வாளர் ராஜசேகர், தலைமை காவலர் அனந்த ராஜ், அசோக்குமார், சன்னிலாய்டு ஆகியோர் ரூ. 80 ஆயிரம் பறித்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டு, புகார் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அவ்விசாரணையில் பணம் பறித்தது உறுதியானது.

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜசேகர், தலைமை காவலர் ஆனந்த ராஜ், அசோக் குமார், சன்னிலாய்டு ஆகிய நால்வரையும் இடைநீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.