டாக்கா:
ங்கதேசம் டாக்காவில் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டார்.
        வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் மூளையாக  செயல்பட்ட முக்கிய குற்றவாளி தமீம் அகமது செளத்திரி உள்ளிட்ட மேலும் இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக வங்கதேச காவல்துறை அறிவித்துள்ளது.
02dhaka2
       டாக்காவில் வெளிநாட்டு தூதரங்கள் அதிகம் உள்ள குஷன் என்ற இடத்தில் உள்ள ஒரு பேக்கரிக்குள் கடந்த ஜூலை ?-ம் தேதி பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் வெளிநாட்டவர் உட்பட பலரை பிணையக் கைதிகளாக சிறைப்பிடித்தனர். பின்னர் அங்கு வந்த மீட்புப்படையுடன் நடைபெற்ற மோதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தரிஷி ஜெயின்(வயது 19) உள்ளிட்ட 20 பணயக் கைதிகள், 2 போலீசார், 5 தீவிரவாதிகள் உள்ளிட்ட 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
      இச்சம்பவம் வங்கதேச வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாகும்.