நெட்டிசன் பகுதி:
Kuwait-தமிழ் பசங்க  முகநூல் பக்கத்தில் இருந்து…
துபையில் கொத்தனாராக பணியாற்றும் உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நன்ஹாக்கு யாதவ் என்பவருக்கு  ஒரு மிலிலியன் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது.
‘அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச்’ என்ற தனியார் பணமாற்று பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக நடத்திய வருடாந்திர சிறப்புக் குலுக்கலில் இந்தப் பரிசை பெற்றார்.
1,116 திர்ஹத்தை தனது வீட்டு செலவுக்கு கடந்த மாதம் ‘அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் மூலம் அனுப்பினார் நன்ஹாக்கு யாதவ். அதற்காக எல்லா வாடிக்கையாளரையும் போல இவருக்கும் பரிசுக்கூப்பன் வழங்கங்கப்பட்டது.     அந்த  இலவச கூப்பனே இந்த மில்லியன் திர்ஹத்தை பெற்றுத் தந்துள்ளது.
இது அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் தனது வியாபார விளம்பர விரிவிற்காக நடத்தும் மூன்றாம் வருட மில்லியனர் குலுக்கல் ஆகும்.

14034923_1318902758127569_4139687591227607540_n

மூன்று குழந்தைகளின் தந்தையான 36 வயது யாதவ் மாதம் 1300 திர்ஹம் சம்பளத்தில் பணியாற்றி வருபவர் தற்போது பரிசு விழுந்துள்ளதை தொடர்ந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊர் திரும்பி ஷாப்பிங் கம்ப்ளக்ஸ் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார்.தனது குழந்தைகளை வாரனாசியில் உள்ள நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்த படிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
கடந்த மாதம் இது போல் துபாய் அரசின் பரிசு கூப்பன் மூலம 6.5 கோடியை இந்தியர் ஒருவர் பரிசாக பெற்றது நினைவிக்கலாம்.
(Soure( தமிழாக்கம்):நம்ம ஊரான்)