கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வரும் நிலையில், வெடிகுண்டு விபத்தில் பலியான ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் சில சந்தேகத்திற்குரிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இந்த கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என என்ஐஏ தெரிவித்து உள்ளது.

கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசாமுபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சார்பில் தனிப்படைகள் அமைக்கபட்டு 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர். முபினின் வீட்டில் வேதிப்பொருட்கள் உட்பட 109 பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா, எஸ்.பி.ஸ்ரீஜித் மற்றும் விசாரணை அதிகாரி விக்னேஷ் உள்ளிட்டோர் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரனை   மேற்கொண்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து, முபினுடன் தொடர்பு உடையவர்களை அறிந்து, அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை கோவை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் போலீசார் சுமார் 300 மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில்  முபீன் வீட்டை சோதனையிட்ட போது கிடைக்கபெற்ற சில சந்தேகத்திற்கு உரிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த குறிப்புகளில் “ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் எழுதப்பட்டு உள்ளது.” “யாருக்கெல்லாம் ஜிகாத் கடமை உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது.” மேலும் “அல்லாஹ்வின் இல்லத்தின் மீது கை வைத்தால் வேரறுப்போம் என்றும் சிலேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.”  இது தவிர அரபி மொழியில் சில வாசகங்களுடன் ஐஎஸ். கொடியை ஒத்து சிலேட்டில் எழுதப்பட்டுள்ளது.

போலீசாரிடம் கிடைத்த இந்த ஆவணங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றன. இந்த சந்தேகத்திற்குரிய ஆவணங்களை கொண்டும், இந்த ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வரும் போலீசார் முபினுடன் தொடர்பில் இருந்த மற்றும் தடை செய்யபட்ட அமைப்பில் தீவிரமாக இருந்த நபர்கள் உள்ளிட்ட 900 பேரின் பட்டியலை தயார் செய்து விசாரணை முடுக்கி விட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த தாக்குதல் திட்டமிட்ட சதி என்று என்ஐஏ அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்! அண்ணன் தம்பியாக வாழும் எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பேட்டி…