சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும்,  திமுக தலைவருமா  கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாருமான  தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நல குறைவின் காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அவர் திடீரென மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  இதுகுறித்து தகவல் அறிநத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உடனே மருத்துவமனைக்கு சென்ற, தாயாரின் உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் தயாளு அம்மாள் கடந்த மார்ச் மாதம் நுரையீரல் பிரச்சினை காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தார். இநத் நிலையில், அவர் திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தயாளு அம்மாள் வழக்கமான  பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும்  அப்போலோ  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.