சென்னை: முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் தேர்வான 7036 மாணவர்கள் கல்லூரியில் சேர நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இதில் சுமார்  500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 10,725 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் 38 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இவை நாட்டிலேயே மிக அதிகமாக 5,225 மருத்துவ இடங்களை வழங்குகின்றன. அதிலும், 2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியது. மேலும்,கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள் உயர்த்தப்பட்டன. இதனையடுத்து அங்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.

இந்த அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களை பிடிக்க மாணவர்களிடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அதில்,  5647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்தனர். மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் 30-ந்தேதியில் இருந்து நாளை (4-ந்தேதி) வரை கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதன்படி, சென்னையில் உள்ள  எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். கோவை பி.எஸ்.சி. தனியார் கல்லூரியிலும் அதிக மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்துள்ளனர். ஒரு மாணவர் 2 ஒதுக்கீட்டிலும் இடங்களை பெற்று இருப்பதால் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ள மாணாக்கர்கள்,  நாளை மாலை 5 மணிக்குள் இடங்களை தெரிவு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, 58 மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்கள் மற்றும் சேராத காலி இடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப உத்தரவிட்ப்பட்ட உள்ளது. இதைத்தொடர்ந்தே,  2-வது கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துச்செல்வன், முதல்கட்ட கலந்தாய்வில் 1 எம்.பி.பி.எஸ், 43 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. நாளை மாலைக்குள் சேராதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அடுத்தகட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும்.

வரும் 7-ந்தேதி 2-வது கட்ட கலந்தாய்வு நடப்பதாக இருந்தது. அது தள்ளிப்போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-து கட்ட கவுன்சிலில் தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் தமிழகத்தில் 2-வது சுற்று தொடங்கும். அடுத்த வாரம் இறுதியில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது காலியாக  அனைத்து  இடங்களும் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.