கோவை: கோவை அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில்,  கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.  ஆ ஆனால், போதிய அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை உள்ளது. புதியதாக மருத்துவர்கள் , செவிலியர்கள் கடந்த சில ஆண்டுகளாக நியமிக்கப்படாத நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. செவிலியர்கள் தொடர்ந்து பணி செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். கொரோனா சிகிச்சை பிரிவில் 100 பேருக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தில் பணிபுரிந்து வருவதாகவும் , இதனால் கடுமையான மன அழுத்ததுக்குஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், உடடினயாக செவிலியர்களையும், மருத்துவர்களையும் நியமிக்க வலியுறுத்தி, கோவை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் கூடுதலாக செவிலியர்களை உடடினயாக நியமிக்க வேண்டும் என்று  100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேச்சுவார்த்தையில் ஈடுட்டதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். செவிலியர்கள் போராட்டம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.