சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து வரும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தாம்பரத்தைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி, அதனை கவர்னர் அனுமதி கோரி அனுப்பி வைத்துள்ளது. ஆனால், 4 மாதங்களைக் கடந்தும் ஆளுநர், தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு அனுமதி மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னையில் மேலும் ஒரு உயிர் போயுள்ளது. . சென்னை தாம்பரம் அருகே மருந்து நிறுவன விற்பனை பிரதிநிதி வினோத் குமார் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 20 லட்சத்தை இழந்துள்ளார். கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி வந்த வினோத் குமார், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தன்னம்பிக்கையற்றவர்களாக மாறும் தமிழர்கள்: தற்கொலையில் தமிழ்நாடு 2 ஆவது இடம்!