துஷான்பே: தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை  7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே நில நடுக்கமும், நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் துருக்கி சிரியால் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஏராளமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை,  சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
இந்த நிலநடுக்கம் சீனாவின் அருகிலுள்ள எல்லையில் இருந்து சுமார் 82 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

இநத் நிலையில்,  அங்கு அடுத்தடுத்து நில அதிர்வுகள் பதிவானகதாக கூறப்படுகிறது. 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது, இறுதியாக 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது, தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் என ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து, 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு. 5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.