மும்பை

சிவசேனா வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள்ல் தனித்துப் போட்டியிட்டால் இழக்கு சிவசேனாவுக்குத் தான் என பாஜக கூறி உள்ளது

பாஜக வும் சிவசேனாவும் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வந்தது.   தற்போது மகாராஷ்டிராவை ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் உள்ள அரசை சிவசேனா குறை கூறி வந்தது.   இது பாஜகவினரிடையே அதிருப்தியை உண்டாக்கியது.   பாஜகவும் சிவசேனாவை இதற்காக கூறை கூறி வந்தது.

சிவசேனா இனி வரும் தேர்தல்களில் பாஜக வுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை எனவும் இனி தனித்துப் போட்டி யிடும் எனவும் நேற்று அறிவித்தது.      சிவசேனாவின் இந்த முடிவை அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்த போது  எந்த ஒரு உறுப்பினரும் அதை எதிர்க்கவில்லை.   அதனால்  இரு கட்சிகளுக்கும் உள்ள உறவு முறிந்துள்ளது வெளியே தெரிய வந்தது.

இது குறித்து மும்பை பாஜக தலைவர் ஆசிஷ் செலாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.    அப்போது அவர்,  ”தனித்துப் போட்டியிட சிவசேனா முடிவு எடுத்தது பாஜகவுக்கு இழப்பில்லை.   மாறாக அது சிவசேனாவுக்குத் தான் இழப்பு.    கூட்டணியை தொடர வேண்டும் என்னும் என்ணத்தில் நாங்கள் இருக்கிறோம்.   சிவசேனாவுக்கு அப்படி ஒரு விருப்பம் இல்லை எனில் பாஜக தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது.    அதை மகாராஷ்ட்ரா மாநிலமும் எதிர்கொள்ள தயாராக உள்ளது”  எனக் கூறி உள்ளார்.