சென்னை:  ஏப்ரல்  23ந்தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு ச ட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும்,தேர்தல் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார். இதில் தேர்தல் நடத்தை  விதிகள்,  தேர்தல் விளம்பர செலவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.   ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடடினயாக அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில்,  தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்  இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 5.69 கோடி வாக்காளர்கள்   உள்ளனர். வாக்குச் சாவடி விவரங்கள் தொடர்பான ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  எந்த வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும்.

விடுமுறை நாள் தவிர அனைத்து நாள்களிலும் வேட்புமனு பெறப்படும். மார்ச் 30 முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமேன பிரசாரம் செய்யலாம். ஆன்லைன் மூலம்  பிரசாரம் செய்ய  அனுமதி கேட்கப்பட வேண்டும் என்றார்.

வாக்காளர் பட்டியல் இடம்பெறாத வாக்காளர்கள்,  மற்றும் புதிய வாக்காளர்கள் மார்ச் 26ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

 தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி  எடுத்துச்செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்யும்போது, மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டு உள்ளோம். இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள், 75,032 ஓட்டுச்சாவடிகள்! ஞானேஷ்குமார் தகவல்…

[youtube-feed feed=1]