பீகார்:

பீகார் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தாக்குதல்களும், அவதூறான சமூக வலைத்தள பதிவுகளும் தொடர்ந்து வருவதால் பொறுமையை இழந்த பீகார் அரசாங்கம் சைபர் கிரைம் பிரிவின் கீழ் புகாரளித்துள்ளது.

இதைப் பற்றி பேசிய பீகாரின் கூடுதல் தலைமை இயக்குனர் ஜிதேந்திர குமார் தெரிவித்துள்ளதாவது: விமர்சனம் என்பது ஜனநாயகத்திற்கு வேண்டிய ஒன்று, ஆனால் அந்த விமர்சனம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான விமர்சனம் என்பது வரவேற்கத்தக்கது, அதை விடுத்து அவமதிக்கும் மொழியை பயன்படுத்துவது, வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை மனதில் வைத்து சமூக ஊடகங்களில் அவமதிக்கும் வகையில் பதிவை போடுவது தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளால் பொறுமையை இழந்த பீகார் அரசாங்க மற்றும் முதல்வர் நிதிஷ்குமார், இவ்வாறாக அவதூறு பரப்புபவர்களையும், சமூக வலைத்தளத்தில் தவறாக பதிவிடுபவர்களையும் கண்காணித்து அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் பிரிவின் கீழ் புகாரளித்தது மட்டுமல்லாமல், மாநில காவல்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களுக்கும் பதிவுகளுக்கும் எதிராக அரிதாக செயல்பட்ட சில மாநிலங்களில் பிஹார் மாநிலமும் ஒன்றாக இணைந்துள்ளது.