சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழ்நாடு எம்.பி.க்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், அடுத்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் சீ நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவைத் தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அவசரக அவசரமாக “Delimitation” செய்ய நினைப்பது, பா.ஜ.க. அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல் என தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “ஒன்றிய பா.ஜ.க அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் ‘மாபெரும் வரலாற்று அநீதி’. இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத்தொடர்து இன்று காலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை யில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து திமுக எம்.பிக்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் அவசர ஆலோசனை நடத்தினார்,. தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, நாளை தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கறுப்புகொடி ஏற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.
