மனைவி ஐஸ்வர்யாவுடன் தனுஷ்
மனைவி ஐஸ்வர்யாவுடன் தனுஷ்

ளிமை, டயலாக் டெலிவரி என்று பல விஷயங்களில் மாமனார் ரஜினியை பின்பற்றும் தனுஷ் இப்போது இன்னொரு விஷ்யத்திலும் ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்… அது – அட்வைஸ்.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்  தொடரி படத்தின்  இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய ர் தனுஷ், “பிரபு சாலமன் மீது நம்பிக்கை வைத்து, படத்தின் முழுக் கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
”தொடரி" ஆடியோ ரிலீஸ்
”தொடரி” ஆடியோ ரிலீஸ்

படப்பிடிப்பின் போதுதான் ஒரு நாள், கதையைக் கேட்டேன்.  அப்போது  என் நம்பிக்கை மேலும்  இன்னும் அதிகமாகி விட்டது.
இந்தப் படத்தின் சண்டை காட்சிகளில், என்னை விட அதிகமாக, ‘ரிஸ்க்’ எடுத்துள்ளவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான்” என்று படத்தைப் பற்றி பேசியவர் திடுமென ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்:
“என்னை பெருமைப்படுத்தும் அளவுக்கு எனது ரசிகர்கள் வளர வேண்டும். முதலில், அவரவர் குடும்பத்தை கவனியுங்கள். தாய், தந்தை, மனைவி உள்ளிட்டவர்கள்தான்  இறுதி வரை உடன் வருபவர்கள். இடையில் வருபவர்கள் இடையிலேயே சென்று விடுவர்; குடும்பம் மட்டுமே நிரந்தரம்” என்று ரொம்ப சீரியஸாகவே அட்வைஸ் செய்தார் தனுஷ்.