ஜினிகாந்த் நடிப்பில்  தயாராகி ரீலீஸுக்கு தயாராக இருக்கும் “கபாலி” வரும்   ஜூலை 1ம் தேதி வெளியாகிறது.   ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய அதிரடி திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தின் இயக்கம் என்பதால் இப்படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
kabali_2
கலைப்புலி தாணு தயாரிப்பில் இப்படம் உருவாகப்போகிறது என்ற அறிவிப்பு வந்ததும், இசை  ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால்  இதனை மறுத்த இய.க்குநர் ரஞ்சித், தனது ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனையே ‘கபாலி’ படத்திற்கும் இசை அமைக்க வைத்தார். இதனால் இசை குறித்த எதிர்பார்ப்பும் எகிறியது. இந்த நிலையில்  படத்தின்  டீசர் வெளியாக…  இதுவரை வேறு தமிழ்ப்படங்களுக்கு இல்லாத வகையில் பெரும் வரவேற்பு பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், ஜூன் 12ம் தேதி கபாலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது.  ஆனால் ரஜினிகாந்த் அமெரிக்காவில் விடுமுறையை கழித்துவருவதால், பாடல்வெளியீட்டு விழாவை ரத்து செய்ய படக்குழுவினரும், தயாரிப்பாளரும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  அதாவது, வெளியீட்டு விழா இல்லாமல்  ஜூன் 12ம் தேதி ‘கபாலி’ பட பாடல்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸ் விழாவை எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.