டில்லி

ற்போது விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்துக்கும் பூரி மடாதிபதிக்கும்  தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி அன்று விண்ணில் செலுத்தியது.  தற்போது சந்திரயான் 2 நிலவை நோக்கி வேகமாக நடந்துக் கொண்டு இருக்கிறது.   இந்த விண்கலம் ரூ. 800 கோடி செலவில் ஏராளமான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பில் உருவாகி உள்ளதை அனைவரும் அறிவார்கள்.   அதே நேரத்தில் இந்த விண்கலம் செலுத்தப்பட்டதில் ஒரு சன்னியாசியின் பங்கு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பூரி கோவர்த்தன மடத்தின் செய்தி தொடர்பாளர், மனோஜ் ரதா,  “பூரி கோவர்த்தன் மடாதிபதி நிஸ்சலானந்த சரஸ்வதியின் வேதக் கணக்குகள் இந்த சந்திரயான் 2 ஏவப்பட்டதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  வேதத்தில் காணப்படும் கணித விவரங்களும் தேற்றங்களும்  குறித்த சந்தேகங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் பூரி மடாதிபதியிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் வருடம் சாமி நிஸ்சலானந்த சரஸ்வதியை அகமதாபாத்தில்  உள்ள இஸ்ரோ மையத்துக்கு விஞ்ஞானிகள் அழைத்தனர்.  அப்போது அவர் தனது உரையில் விண்வெளி குறித்த வேதக் கணக்குகள் மற்றும் வேகங்கள் குறித்து ஏற்கனவே பழங்கால இந்தியர்கள் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அதிலுள்ள வேதக் கணிதம் குறித்தும் அவர் விவரித்தார்.

இதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் சூரியன், சந்திரன், செவ்வாய், மற்றும் அனைத்து கிரகங்கள் பூமியில் இருந்து உள்ள தூரத்தையும் அந்த கிரகங்களின் அளவையும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர்.    பூரி மடாதிபதி இந்த கணக்கீட்டுக்குப் பெரிதும் உதவி உளர்.  இது சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட மிகவும் உதவி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த செய்தி இஸ்ரோவால் உறுதி செய்யப்படவில்லை.