டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், இன்று தலைநகர் டெல்லியில்  காங்கிரஸ் செயற்குழு கூட்டம்  கூடுகிறது.

கடந்த (2023) ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. காங்கிரஸ்  கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே  இளைஞா்கள் சிலருக்கு வாய்ப்பு அளி;தது மாற்றி அமைத்திருந்தார். அதன்படி காங்கிரஸ் செயற்குழுவில் மொத்தம் 84 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் 39 போ் வழக்கமான உறுப்பினா்கள், 32 போ் நிரந்தர அழைப்பாளா்கள், 13 போ் சிறப்பு அழைப்பாளா்கள் ஆவார்கள்.

இந்த நிலையில், புதிய உறுப்பினர்களுடன் இன்று செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. இதில், செயற்குழு உறுப்பினர்களுடன் ராஜஸ்தான், சத்தீஸ்கா் முதலமைச்சா்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தோ்தலும் நடைபெறவுள்ளது இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது.  எதிா்க்கட்சிகள் INDIA கூட்டணி என்ற பெயாில் ஒன்றிணைந்து தோ்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இந்த  சூழ்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் காங்கிரஸ்  கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், மத்திய விசாரணை அமைப்புகளால் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கைது செய்யப்படுவது தொடா்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது

இது தவிர தற்போதைய அரசியல் சூழல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தோ்தல்களை எதிா்கொள்ள தயாராவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.