புதுடெல்லி:

பிரதமர் மோடிக்கு எதிராக நூதன பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் மோடிக்கு கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு தினமும் திணறிடித்துக் கொண்டிருக்கிறார் அகில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.


இந்நிலையில், வார்த்தை விளையாட்டை ‘மோடி மோசடியை கண்டுபிடி, பரிசை அள்ளு’ என்று தலைப்பிட்டு இன்ஸ்ட்ராக்ராமில் தொடங்கிருக்கிறது காங்கிரஸ்.

கூர்ந்து கவனித்தால், பணமதிப்பிழப்பு, ரஃபேலே போன்ற ஆங்கில வார்த்தைகள் தெரியும்.

‘மோடி மோசடி’ தொடர்பான 10 வார்த்தைகள் இதில் ஒளிந்திருக்கும். அதனை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.