உ.பியில் ஆட்சியை பிடிக்க காங். தீவிரம்!  2500 கி.மீ. யாத்திரை தொடங்கினார் ராகுல்!!

Must read

தியோரியா :
டுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி , உ.பி.,யில்  2,500 கி.மீ.  கிஷான்  யாத்திரையை இன்று தொடங்கினார். 2017-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தனது 27 வருட வனவாசத்தை முடித்துக்கொள்ள காங்கிரஸ் துடிக்கிறது.
1kisan yatra-21a-kisan yatra-2
ஏற்கனவே உ.பி.,யில் ஆட்சியை பிடிப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜ., ஆம்ஆத்மி  போன்ற கட்சிகள்  வேட்பாளர்களை அறிவித்து  தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக, பொதுமக்களை சந்திக்கும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ‘மெகா பாத யாத்திரை’க்கு காங்., ஏற்பாடு செய்துள்ளது. மொத்தம், 39 மாவட்டங்கள் வழியாக, 25 நாட்களில், 2,500 கி.மீ., துாரம் யாத்திரை செய்து பிரசாரம் செய்ய, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பங்கேற்கிறார்.
இதனையடுத்து உ.பி.,யில் 2,500 கி.மீ. தூர பிரசார யாத்திரையை ராகுல் இன்றுதொடங்கினார்.  ‘ கிசான் யாத்திரை’ எனப் பெயரிட்டுள்ள இந்த யாத்திரை, ராகுலின் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட யாத்திரை என்று கூறப்படுகிறது.
இதற்கென புதிய பிரச்சாரத் திட்டங்களுடன் களமிறங்கிய காங். துணைத்தலைவர்  ராகுல்காந்தி விவசாயிகளின் பிரச்சனைகளை கையிலெடுத்து ஒரு மாநிலந்தழுவிய பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார்.
சமீபத்தில் ஒரு உ.பியில் டியோரியா என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல், இந்த மாவட்டத்தில் இருந்த 17 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு. அவர்கள் உங்களை மறந்துவிட்டார்கள் என்றார்ல.
விவசாயிகளிடம் பெறும் விலைக்கும், சந்தை விலைக்கும் இருக்கும் பெருத்த வித்தியாசத்துக்கு காரணம் என்ன என்று பிரதமர் மோடியிடம் கேட்டேன், அதற்கு இன்று வரை பதில் இல்லை. எனவேதான் அரசின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் இந்த கிசான் யாத்திரையை தொடங்க வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே உ.பியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் ராகுல் விவசாயிகளை வீடுவீடாக போய் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

More articles

Latest article