20/20 கிரிக்கெட் பாணி: டென்னிஸ் போட்டி நேரம் குறைப்பு! கவுன்சில் ஆலோசனை!!

Must read

கிரிக்கெட்டில் நாள் கணக்கில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகள், பின்னர் 50/50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாக பரிணமித்தது. ஒருநாள் முழுவதும் செலவிட்டு கிரிக்கெட் பார்க்க மக்கள் தயங்கும் அளவுக்கு வாழ்க்கை வேகமாகி விட்டதால் பின்னர் அதுவும் குறைக்கப்பட்டு 20/20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
1Tennis_shake_hands_after_match
இப்போது அதே பாணியை டென்னிசும் பின்பற்றி அடுத்த பரிமாணத்துக்கு காத்திருக்கிறது. முன்னாள் ஏடிபி கவுன்சில் தலைவர் எரிக் புடோராக் செய்தியாளார்களிடம் தெரிவித்த கருத்துப்படி முதற்கட்டமாக ஆண்கள் டென்னிஸின் விளையாட்டு நேரங்கள் அதிரடியாக குறைக்கப்படலாம்  என்று தெரிகிறது.
இது சம்பந்தமாக தீவிர விவாதங்கள் நடந்துவருவதாகவும் விளையாட்டின் சுற்றுக்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எதிலும் விரைவை விரும்பும் இளைய தலைமுறைகளை திருப்தி செய்யவும், தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் தேவையானது என்று அவர் குறிப்பிட்டார்.

More articles

Latest article