கூட்டத்தினரால் கொல்லப்படுவதை தடை செய்ய சட்டம் : காங்கிரஸ்

Must read

டில்லி

காங்கிரஸ் தனதுதேர்தல் அறிக்கையில் கும்பலால் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற படும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மத சார்பற்ற நிலையை காட்டும் வண்ணம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. அது மட்டுமின்றி கட்டாய மருத்துவ உதவி, பெண்கள் நலன், மாற்று பாலினத்தவர் உரிமைகள், வேலைவாய்ப்பு உறுதி மற்றும் தேச விரோத சட்டத் தடை ஆகியவைகளும் தேர்தல் வாக்குறுதிகாளாக அறிக்கையில் உள்ளன.

இது குறித்து காங்கிரஸ், “நாங்கள் தேசியத்தை எங்கள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி உள்ளோம். இது கோட்சேவின் தேசியத்துக்கு எதிரான காந்தியின் தேசியம் ஆகும். மற்றும் கோட்சேவின் இந்தியாவுக்கு எதிராக காந்தியின் இந்தியாவை உருவாக்க எண்ணி உளோம். எனவே எங்கள் தேர்தல் அறிக்கையில் மதச்சார்பின்மைக்கு முக்கிய பங்கு அளிகப்பட்டுள்ள்து.

அது மட்டுமின்றி தற்போது கும்பலால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் இதை அடியோடு ஒழிப்பதே நமது கடமை ஆகும். எனவே அதை தடுக்கும் வகையில் கடுமையான தண்டனைகள் கொண்ட சட்டம் இயற்றப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியானது மக்களை மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரிப்பதற்கு எதிரானது. அது எப்போதும் பிரிவினை அரசியலை ஆதரித்தது இல்லை.

நமது காந்திய தேசியத்தின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை உருவாக்கப் பட்டுள்ளது. அத்துடன் இது ராகுல் நடத்தும் அரசு குறித்த தேர்தல் அறிக்கை. அதனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை போல் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் அளிக்கப் பட்டுள்ளது.” என கூறி உள்ளது.

More articles

Latest article